வரலாறு
இந்திய வம்சாவளி மலையகத் தமிழ்ச் சமூகம், பிரித்தானியக் காலனித்துவக் காலத்தில் கோப்பி, தேயிலை, இறப்பர், தென்னைத் தோட்டப் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப தென்னிந்தியாவிலிருந்து அழைத்து வரப்பட்ட தொழிலாளர்களின் வழித்தோன்றல்கள். இரண்டு நூற்றாண்டுகளுக்கும் மேலாக இலங்கையின் பொருளாதார வளர்ச்சியின் மையமாக இச்சமூகம் இருந்து வருகிறது.
19th c.
இலங்கையின் ஏற்றுமதிப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக மாறிய கோப்பி, தேயிலை, இறப்பர், தென்னைத் தோட்டங்களைக் கட்டியெழுப்ப, பிரித்தானியக் காலனித்துவக் காலத்தில் தென்னிந்தியாவிலிருந்து தொழிலாளர்கள் அழைத்து வரப்படுகின்றனர்.
1948
இலங்கைக் குடியுரிமைச் சட்டம் இந்திய வம்சாவளித் தமிழர்களில் பெரும்பான்மையினரின் குடியுரிமையையும் வாக்குரிமையையும் பறித்து, 7,00,000க்கும் அதிகமானோரை நாடற்றவர்களாக்குகிறது.
1964–74
இலங்கை-இந்திய இருதரப்பு ஒப்பந்தங்கள் பாரிய அளவிலான நாடு திருப்புதல், குடும்பப் பிரிவு மற்றும் பல தசாப்த கால நிச்சயமின்மைக்கு வழிவகுக்கின்றன.
2003
சுதந்திரத்துக்குப் பின் அரை நூற்றாண்டுக்கும் மேலாகி, இறுதியாக முழுக் குடியுரிமை மீட்கப்படுகிறது; எனினும் இச்சமூகம் நாட்டின் மிகவும் சமூக-பொருளாதார ரீதியில் பின்தங்கிய சமூகங்களில் ஒன்றாகவே உள்ளது.
2015
ஜ.ம.மு, தே.தொ.ச, ம.ம.மு தமிழ் முற்போக்குக் கூட்டணியாக ஒன்றிணைந்து, ஆறு பாராளுமன்ற உறுப்பினர்களைப் பெற்று, அமைச்சரவை மற்றும் இராஜாங்க அமைச்சுப் பிரதிநிதித்துவம் மூலம் தேசிய ஆட்சியில் நுழைகின்றன.
2015–19
தோட்டப் பகுதிகளுக்குப் புதிய பிரதேச செயலகங்களும் உள்ளூர் நிறுவனங்களும்; 4,000க்கும் அதிகமான வீடுகள் நிறைவு; 10,000 இந்திய உதவி வீடுகள் அறிவிப்பு; புதிய கிராமங்களுக்கான தனி அதிகாரசபை நிறுவப்பட்டது.
2018
தோட்டச் சமூகங்களுக்கு நேரடியாகச் சேவையாற்ற உள்ளூராட்சி மன்றங்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டு, தோட்டங்களுக்கும் பிரதான உள்ளூராட்சிக்கும் இடையிலான நீண்டகாலத் தடைகள் அகற்றப்படுகின்றன.
2019–25
நியாயமான ஊதியம், நில மற்றும் வீட்டு உரிமைகள், கல்வி, சுகாதாரம், சம குடியுரிமைக்காக த.மு.கூ தொடர்ந்து குரல் கொடுப்பதுடன், தகுதியான இந்திய வம்சாவளித் தமிழர்களுக்கு OCI அணுகலை முன்னெடுக்கிறது.
2035
இலங்கையின் தேசிய வாழ்வில் முழுமையான, சமமான உரிமையுடன், நம்பிக்கையுள்ள, நில உரிமையுள்ள, கல்வியறிவுள்ள, பொருளாதார ரீதியில் முன்னேறும் சமூகம்.

இந்த வரலாறு ஏன் முக்கியம்
குடிமக்களைக் கட்டியெழுப்பும் அரசியலின் இடத்தை உழைப்பை நிர்வகிக்கும் அரசியல் பிடித்தது. உரிமை, வலுவூட்டல், வாய்ப்புகளை உருவாக்குவதை விட சார்புநிலையைப் பேணுவதிலேயே கவனம் இருந்தது.
21ஆம் நூற்றாண்டில், சமூகத்துக்குத் தேவை படிப்படியான நலன்புரி அல்ல, கட்டமைப்பு மாற்றம் என்பது தெளிவானது: உழைப்பிலிருந்து உரிமைக்கு, லயன் அறைகளிலிருந்து கண்ணியமான வீடுகளுக்கு, புறக்கணிப்பிலிருந்து பங்கேற்புக்கு, தனிமையிலிருந்து தேசிய ஒருங்கிணைப்புக்கு.